ஐபிஎல் 2022: டெல்லி அணியில் 6 பேருக்கு கொரோனா - போட்டி நடைபெறுமா?
ஐபிஎல் தொடரில், டெல்லி அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரரான மிட்சல் மார்ஷ் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்கலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் 15-வது சீசன் போட்டி நடைப்பெற்று வருகிறது. கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் இல்லாமல், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய இடங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு - கண்ணீர் மல்க வேண்டுகோள்
6 பேருக்கு கொரோனா
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது.
இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், இரண்டாவது முறையாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போட்டி நடைப்பெறுமா?
அதில், முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், இரண்டாவது முறையாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், இரண்டாவது முறையாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், புனேவில் நடைபெற இருந்த போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.