கடைசி ஓவரில் சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டியில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷாருக்கான், நாதன் எல்லிஸ், வைபவ் அரோரா ஆகியோருக்குப் பதிலாக சந்தீப் ஷர்மா, ரிஷி தவான் மற்றும் பனுகா ராஜபக்சே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரரான கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் மந்தமான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் கேப்டன் மயங் 2 பவுண்டரிகளை விரட்டி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ராஜபக்சே உடன் ஜோடி அமைத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 46வது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார்.
இந்த ஜோடியில் 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட பானுகா ராஜபக்சே 42 எடுத்து அவுட் ஆனார். 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்களை அடித்த லியாம் லிவிங்ஸ்டோன் 19 ரன்னில் அவுட் ஆனார்.
கடைசி வரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார்.
188 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தலா 1 பவுண்டரியை அடித்த மிட்செல் சான்ட்னர் 9 ரன்னிலும் ஷிவம் துபே 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இதனைத்தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களில் அவுட் ஆனார். தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து நிதானமான விளையாடி வந்த சென்னை அணிக்கு மிடில்-ஓவர்களில் உத்வேகம் கொடுத்திருந்தார் அம்பதி ராயுடு.
அரைசத்தை அடித்த அவர் சந்தீப் சர்மா வீசிய 16 ஓவர்கள் ஹாட்ரிக் சிக்சருடன், பவுண்டரி விளாசினார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர், வெற்றிக்கு 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷி தவான் வீசிய 20 ஓவரை சந்தித்த தோனி முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தை டாட் பால் விட்டு, 3 வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஐஸ்வர்யா தான் உதவியாக உள்ளார்! முதல்முறையாக தனுஷ் ஓபன் டாக்
சென்னை அணியின் 6 வது தோல்வி
சென்னையின் வெற்றிக்கு 3 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது, பிரிட்டோரியஸ் 1 ரன் எடுக்க, 5வது பந்தில் சிக்ஸர் அடித்தார் கேப்டன் ஜடேஜா, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க, சென்னை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணிக்கு இது 6வது தோல்வியாகும்.
Trust the process, always ? What a great team win! Thank you for all your wishes ? pic.twitter.com/ReZVSnDlMs
— Shikhar Dhawan (@SDhawan25) April 25, 2022