8வது முறையாக தோல்வியை தழுவிய மும்பை - லக்னோ அபார வெற்றி
ஐபிஎல் வரலாற்றில் 8வது முறையாக தோற்று இடம் பிடித்த மும்பை - ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுலும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர்.
முதல் 2 ஓவரில் மும்பை அணி கட்டுக்கோப்பாக பந்துவீச வெறும் 6 ரன்கள் தான் சென்றது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் போக மறுபக்கம் மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடிய ராகுல் நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக 2வது சதம் விளாசினார்.
விராட் கோலி மோசமாக விளையாடுவதற்கு இவர்கள் தான் காரணம் - முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு
இதன் மூலம் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 8 ரன்னில் கிஷான் 8 ரன்களில் அவுட் ஆக, ரவீஸ் 3 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, 39 ரன்கள் விளாசி முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதனால் மும்பை அணி தடுமாறியது. எனினும் தனி ஆளாக போராடி கிலக் வர்மா, 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து முக்கிய ஆட்டத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் கடைசி 2 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சமிரா அபாரமாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதன்பின்னர் கடைசி ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது.
இதில் பொலார்ட் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவர் மீது குர்னல் பாண்டியா எகிறி குதித்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட் விழ, லக்னோ 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதனால் 8வது முறையாக மும்பை அணி தோற்று ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#AbApniBaariHai Dobaara ft. @LucknowIPL! ?
— Star Sports (@StarSportsIndia) April 24, 2022
Rate #LucknowSuperGiants' season double over #MumbaiIndians on a scale of ?.#LSG #TATAIPL #IPL2022 #LSGvMI #YehAbNormalHai pic.twitter.com/sn8f7iA08d