மைதனாத்தில் பவர் கட்டால் பரிதாப நிலைக்கு சென்ற சென்னை அணி - தெறிக்கவிடும் மீம்ஸ்
தமிழகத்தில் தான் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர் என்றால், இன்றைய சென்னை மற்றும் மும்பைக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கும் பவர்கட் பிரச்சினை சோகத்தை ஏற்படுத்திவிட்டது.
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை மோதிகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில், பேட்டிங் செய்த அணி, தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும்,ராபின் உத்தப்பா 1 ரன்களில், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அம்பத்தி ராயுடும் 10 ரன், ஷிவம் தூபே 10 ரன்னில் வெளியேற, கேப்டன் தோனி மற்றும் ப்ராவோ களத்தில் அடித்து விளையாட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் தொடக்கத்தில், சென்னை அணியில் கான்வே மற்றும் ருதுராஜ் அவுட் ஆகியதும், DRS முறை எடுக்க முடியாமல் போனது, மைதனானத்தில் கரண்ட்
இல்லாததால் DRS முறையை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் பலவிதமான கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.



