ஜடேஜாவை திடீரென Unfollow செய்த சென்னை அணி - ரெய்னாவை போல் ஜடேஜாவை ஒதுக்கிறதா?
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இந்த ஆண்டுக்காக கேப்டன் பதிவியில் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
ஆனால், ஜடேஜா கேப்டன் பதவியில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. போட்டிகளிலும், சொதப்பி வந்தார்.
இதனால், தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்த ஜடேஜா ஆட்டத்தில் கவனம் செலுத்தப்போவதாக கூறினார்.
இதனையடுத்து, பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஃபில்டிங் செய்த போது ஜடேஜா கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா உட்கார வைக்கப்பட்டார். காயம் காரணமாகவும் ஜடேஜா விலகினார்.
சென்னை அணியில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில் Unfollow
இந்நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகிவிட்டதாக சிஎஸ்கேவும் அறிவித்துள்ளது. மேலும், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சிஎஸ்கே நிறுத்தியுள்ளது.
இதனால், சுரேஷ் ரெய்னா பாணியில், ஜடேஜாவையும் சென்னை அணி புறக்கணிக்கிறர்தா? என கேள்விகள் எழுந்துள்ளன.
என் வாழ்க்கையில் இப்படி நடந்தது இல்லை... மோசமான விளையாட்டுக்கு மவுனம் கலைத்த விராட் கோலி!
காசி விஸ்வநாதன் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த, சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணியில் ஜடேஜா எப்போதும் முக்கிய பங்கு வகிப்பார்.
ஜடேஜா அடுத்த சீசனிலும், தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார்.
காயம் காரணமாக மருத்துவக்குழு அளித்துள்ள அறிக்கையின் படி தான் சென்னை அணியிலிருந்து ஜடேஜா விலக்கி கொள்ளப்பட்டதாகவும், இதை தவிர வேறு காரணமில்லை என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.