ஐபிஎல் மூலம் உமேஷ் யாதவ் செய்த புதிய சாதனை - கொல்கத்தா அணியின் அபார வெற்றி!
இன்றைக்கான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதுன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி உமேஷ் யாதிவின் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
137 ரன்களில் சுருண்ட பஞ்சாப் அணி அதிகபட்சமாக ராஜபக்சே மட்டும் 31 ரன்கள் 9 பந்துகளில் அடித்தார்.
தினமும் அரை க்ளாஸ் குடிச்சா போதும்!இதய நோய் நீரிழிவை தடுக்கும் அற்புத ஜூஸ்
அபார பந்துவீச்சு
உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும்,சவுதி 2 விக்கெட்டுகளை எடுத்தனர் மற்றவர்கள் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
138 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில், விக்கெட்டுகளை பறிகொடுக்க, பின்னர் வந்த ரஸல் சிக்ஸர் மழையை பொழிய ஆரம்பித்தார்.
70 ரன்கள் 31 பந்துகள் 8 சிக்ஸர் 2 பவுண்டரி என நாட் அவுட்டுடன் கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

ரசலின் அதிரடி
இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவு செய்தது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மாலை நேரத்தில் சுவையான மசால் வடை - 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
உமேஷ் யாதவ் புதிய சாதனை
உமேஷ் யாதவ் கடைசியாக ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது.
மேலும் டி20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் ஐபிஎல் போட்டியிலும் உமேஷ் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்படி இருந்த உமேஷ் யாதவ் மீது நம்பிக்கை வைத்த கேகேஆர் அணி அவருக்கு லீடர் ஆப் தி அட்டாக் என்ற பெருமையை கொடுத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வரலாற்றில் பவர்பிளேவில் உமேஷ் யாதவ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த மைல் கல்லை எட்டும் 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார்.
This is an Umesh Yadav appreciation tweet ?
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
4-1-23-4 - Figures we aren't forgetting for a long long time.#KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/glShXnDWOt