தனி ஒருவனாக சென்னை அணியை புரட்டி எடுத்த டேவிட் மில்லர் - கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் 29வது ஆட்டத்தில் சென்னை அணியும், குஜராத் அணியும் இன்று மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் ஆரம்பிக்க வந்த வேகத்தில் 3 ரன்களில் உத்தப்பா நடையை கட்டினார். அடுத்து வந்த மொயின் அலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மீண்டு வந்த ருதுராஜ்
இதைத்தொடர்ந்து களம்கண்ட ராயுடு, ருதுராஜுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சிக்ஸர், பவுண்டரி என விளாச இதுவரை விளையாடமல் இருந்த ருதுராஜ் இந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி 73 ரன்களை அடித்து அவுட் ஆனார்.
அம்பத்தி ராயுடுவும் 46 ரன்கள் அடிக்க இறுதியில் சென்னை அணி 169 ரன்களை அடித்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய குஜராத் அணி விரித்திமான் சாகா, சுப்மன் கில் எதிர்ப்பார்த்தப்படி விளையாட வில்லை.
சாஹா 18 பந்துகளுக்கு 11 ரன்களுடனும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த களமிறங்கிய விஜய் சங்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அபினவ் மனோகர் 12 ரன்களுடனும் வெளியேறினார்.
இரட்டை குழந்தை பிறக்க ஆசையா? தம்பதிகள் செய்ய வேண்டியது இதுதான்!

மிரட்டிய டேவிட் மில்லர்
இதனைத்தொடர்ந்து குஜராத் அணிக்கு தோல்வி உறுதியானது என நினைத்த நிலையில், டேவில் மில்லர் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார் அவருக்கு உறுதுணையாக ரஷித்கான் 40 ரன்களை விளாசி அவுட் ஆக, இறுதி வரை நின்ற மில்லர், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
ஜோர்டன் ஓவரில் ஒரு சிக்ஸரை அடிக்க, பின்னர் நோ பாலில் பவுண்டரி அடித்தார். 2 ரன்கள் வெற்றி என்ற நிலையில் ஒரு பால் மிச்சம் வைத்து மில்லர் போட்டியை முடித்து வைத்தார்.
சென்னை அணியின் வெற்றிக்கு தனி ஒருவனாக தண்ணிக்காட்டிய மில்லர் 94 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
That feeling. THAT FEELING! ?pic.twitter.com/eWwKlb4xLU
— Gujarat Titans (@gujarat_titans) April 17, 2022