ஐபிஎல் : தோனி போட்ட மாஸ்டர் ப்ளானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ
ஐபிஎல் இந்த ஆண்டுக்கான தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக இறுதி கட்ட பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த வார இறுதியில் அட்டவணை வெளியாகலாம். எனவே கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் புனோவில் நடைபெறுகிறது. எனவே அனைத்து அணிகளும் வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மும்பையில் ஆஜராக வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
தனியார் ஹோட்டலில் அனைவரும் பயோ பபுளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதனையடுத்து, அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்கள் தனிமைப்படுத்துதலிலும், இந்திய வீரர்களுக்கு 3 நாட்கள் தனிமைப்படுத்தலிலும், கட்டாயம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமை காலத்தில் எடுக்கப்படும் 3 கொரோனா பரிசோதனையிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் வரும் மார்ச் 14-ம் தேதி முதல் அணிகள் பயிற்சியை தொடங்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பால் சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சென்னை அணி தான் வழக்கமாக முதலில் பயிற்சி முகாமை தொடங்கும்.
அந்த வகையில் வரும் மார்ச் 2-ம் தேதி முதல் சூரத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. சூரத்தில் தான் தோனியின் மாஸ்டர் ப்ளானே இருந்தது. என்ன ப்ளான் என்றால், மும்பையில் உள்ள மைதானமும், சூரத்தில் உள்ள மைதானமும் கிட்டத்தட்ட 75% சதவீதம் ஒரே மாதிரியானவை.
அங்கு விளையாடி பயிற்சி பெற்றால் மும்பையில் ஆட எளிதாக இருக்கும் என ஸ்கேட்ச் போட்டுள்ளார். ஆனால், தற்போது பிசிசிஐ-ன் நடவடிக்கையால் அனைவரும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் மும்பைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சிஎஸ்கே அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருப்பதால் மும்பை களத்தை சமாளிப்பது சிரமம் தான்.