117 கிலோ உடல் எடையில் இருந்த இலங்கை வீரர்... எடையை குறைத்து சாதித்தது எப்படி?
ஐபிஎல் சீசனில் கலக்கி வரும் இலங்கை வீரர் தீக்சனா, தமது கடினமான கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக தேர்வான தீக்சனா 8 போட்டியில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் சிஎஸ்கேவின் தவிர்க்க முடியாத வீரராக தீக்சனா விளங்கி வருகிறார். தீக்சனாவுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. காலம் மாற, கிரிக்கெட்டுக்கும் உடல் தகுதி ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது.
இதனால் 2017, 2018ஆம் ஆண்டிலேயே அண்டர் 19 கிரிக்கெட்டில் தேர்வாகி, தீக்சனா ஒரு போட்டியல் கூட விளையாடவில்லை. அதற்கு காரணம் அவர் உடல் எடை தான்.
107 கிலோவாக மாறிய எடை
117 கிலோ உடல் எடை, மாமிச மலை போல் தோற்றம் இருந்ததால் தீக்சனாவுக்கு விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை.
வாட்ஸ் அப் செயலியில் உருவாகும் புதிய அம்சம் - இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்த முடியுமாம்!
எப்போதும் வாட்டர் பாயாக தான் தீக்சனாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தி இருக்கிறது.
தண்ணீர் எடுத்துக்கிட்டு ஓடு அப்போதாவது எடை குறையட்டும் என்று கிண்டல் வார்த்தையையும் தீக்சனா கேட்டுள்ளார்.
மீண்டும் எடையை குறைத்து சாதனை
இதனால் கடின உடல் பயிற்சி மூலம் தீக்சனா உடல் எடையை குறைத்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.
அடுத்தடுத்து வருடங்களில் இலங்கை அணியில் விளையாட வாய்ப்பு, டி20 உலககோப்பையில் களமிறங்க வாய்ப்பு என எல்லாம் கிடைத்தது.
அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைப் பயிற்சி பவுலராக கடந்த ஆண்டு இணைந்தார்.
இம்முறை மெயின் அணியில் ஏலத்தில் தேர்வாகி தோனியின் துருப்பு சீட்டாக தீக்சனா விளங்குகிறார்.
இது குறித்து பேசிய தீக்சனா, தன்னம்பிக்கையுடன் போராடி, முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
Big Dreams are not impossible if we Believe in the process! Hear it from Theekshana! ?➡️#WhistlePodu #Yellove ?? @Dream11 #DreamBigDream11 pic.twitter.com/9gYbb3TPjT
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2022