வாட்ஸ் அப் செயலியில் உருவாகும் புதிய அம்சம் - இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்த முடியுமாம்!
வாட்ஸ் அப் நிறுவனமானது தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு புது புது அம்சங்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப் தனது செயலியில் புதிதாக கம்பேனியன் மோட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கம்பேனியன் மோட் கொண்டு பயனர்கள் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பல்வேறு சாதனங்களில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் மல்டி-டிவைஸ் அம்சம் கொண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டை போன் மற்றும் கணினியில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.
மேலும் தொடர்ந்து படிக்க... ஆப்பிள் 14 மாடலில் வெளியாகப்போகும் புதிய அசத்தலான அம்சங்கள்
இண்டர் நெட் இன்றி பயன்படுத்தலாமா?
இந்த அம்சத்தின் முக்கியத்துவமே ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லாத சமயங்களிலும் தொடர்ந்து கணினியில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். புது அம்சம் கொண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பல்வேறு சாதனங்கள் அதாவது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களில் பயன்படுத்தலாம்.
இதுமட்டுமின்றி, கம்பேனியன் மோட் அம்சத்தை இரண்டாவது சாதனத்தில் மற்றொரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைத்தும் பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்யும் போது, ஏற்கனவே லாக் இன் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் அக்கவுண்ட் அந்த சாதனத்தில் இருந்து லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.
இவ்வாறு செய்யும் போது அனைத்து டேட்டாவும் காணாமல் போகிடும். கம்பேனியன் மோட் பயன்படுத்தும் முன் வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் செய்வது அவசியம் ஆகும்.
தற்போது வெளியாகி இருக்கும் கம்பேனியன் மோட் அம்சம் ஆரம்ப கால வளர்ச்சி பணிகளில் உள்ளது. வெளியாக மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது.