ஐபிஎல் Bio-Bubble: இதை செய்தால் போட்டியாளர்கள் நீக்கப்படுவார்கள்.. முக்கிய கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 26ம் தேது தொடங்க இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக Bio-Bubble விதிமுறைகளை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத வீரர்களை போட்டியில் இருந்து விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்டுபாட்டுகளை அறிவித்துள்ள பிசிசிஐ, மீறும் வீரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பயோ பபிள் விதிமுறைகள்
முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வீரர்கள் 7 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அடுத்ததாக விளையாடாத போட்டிகளுக்கு வீரர்கள் / போட்டி அதிகாரிகள் ஊதியம் பெற மாட்டார்கள்.
இரண்டாவது முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு போட்டி விளையாட தடை விதிக்கப்படும்.
மூன்றாவது முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வீரர் / அணி நிர்வாக ஊழியர்கள் ஐபிஎல் பயோ-பப்பில் இருந்து நீக்கப்படுவர்.
நீக்கப்படும் வீரருக்கு மாற்று வீரர் சேர்த்துக்கொள்ள முடியாது. மேலும், கொரோனா பரிசோதனையை தவற விடும் வீரர்களுக்கு முதன் முறையாக எச்சரிக்கை விடப்படும்.
பின்னர் இந்த தவறு நேர்ந்தால், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதுடன் மைதானத்திலும் நுழைய அனுமதி இல்லை.

குடும்ப உறுப்பினர்களுக்கான கட்டுப்பாடு
குற்றம் நடந்தால், 7 நாட்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள். அந்த வீரரும் தனிமைப்படுத்தப்படுவார்.

உரிமையாளர்கள் கட்டுப்பாடு
உரிமையாளரே குற்றம் செய்தால், ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும். இரண்டாவது முறையாக தவறு நடந்தால் ஒரு புள்ளிகள் குறைக்கப்படும். 3-வது முறையாக தவறு நடத்தால் 2 புள்ளிகள் குறைக்கப்படும்.
குறைந்தபட்சம் 12 வீரர்களை ஒரு அணி களமிறக்க தவறும்பட்சத்தில் போட்டி மீண்டும் நடத்த திட்டமிட முயற்சி எடுக்கப்படும்.
அதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது அந்த அணிக்கான போட்டி ரத்து செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிக்கு தெரியாமல் அணி வீரர்கள் வெளியேறினால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
முக்கியமாக ஐபிஎல் போட்டியின் சூழலைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.