இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி!
இலங்கை யாழ்ப்பாணத்தில் 15 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று (24) ஆரம்பமானது.
இன்று காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை (25) மற்றும் நாளை மறுதினம் (26) ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
இன்று காலை 09:30 யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நூற்றுக்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வர்த்தக சந்தையில் மலிவான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |