மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றிய ஜவ்வரிசி! எப்படி இது வந்தது -ன்னு தெரியுமா?
இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கபடுவது தான் ஜவ்வரிசி.
ஜவ்வரிசியின் ஆங்கில பெயர் சாகோ (SAGO) என அழைப்பார்கள். இந்த ஜவ்வரிசியை எப்படி தயாரிப்பார்கள் தெரியுமா?
ஒரு வகையான பணமரத்தின் பதநீரைக் காய்ச்சி இறுதியில் கிடைக்கும் மாவு போன்ற ஒரு பொருளை சிறு சிறு குருணைகளைப் போல் உருட்டி தயாரிக்கப்படுவது தான் ஜவ்வரிசி.
இதனை ஆரம்பகாலங்களில் இந்தியர்கள் தான் அறிமுகம் செய்தார்கள். பின்னர் தென்னிந்தியா பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக உணவில் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதனை தயாரிக்க மூலப்பொருளாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கு பிரேசில் தான் விளைந்தது.
இது எப்படி இந்தியாவிற்கு வந்தது என சந்தேகமாகவே இருக்கின்றது. இது குறித்து பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு எப்படி தென்னிந்திய மாநிலத்திற்கு வந்தது?
ஆயில்யம் திருநாள் ராம வர்மா கடந்த 1800 காலப்பகுதிகளில் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆட்சியாளனாக இருந்தான்.
அப்போது இந்தியாவில் பாரிய பஞ்சம் ஏற்பட்டது. அவரது சகோதரரும் வாரிசுமான விசாகம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் இந்த பஞ்சத்தை குறைக்க வேண்டும் என நினைத்தான். இதற்கான முயற்சியின் போது தான் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு உச்சாகம் அளிப்பதற்காக இந்த மாவுச்சத்து கிழங்கை அறிமுகம் செய்தான்.
மன்னரின் இளைய சகோதரர் விசாகம் ஒரு தாவரவியலாளர் மரவள்ளிக்கிழங்கின் பண்புகளை சரியாக கடைபிடித்த காரணத்தால் இந்த பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
வெளி நாட்டிலிருந்து வரும் வேர் கிழங்கை அக்கால மக்கள் சாப்பிடுவதற்கு சற்று பயந்தார்கள். இவர்கள் அந்த வேரில் விஷம் இருப்பதாக நம்பினார்.
இதற்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரச உணவுகளில் இதனை சமைக்குமாறும் இது குறித்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் வழியுறுத்தினார்.
இந்த கிழங்கு தான் பேச்சு வழக்கில் “கப்பக்கிழங்கு” என்று அழைக்கப்பட்டது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் மரவள்ளிக்கிழங்கு மக்கள் நம்பதகுந்த உணவாக பார்த்து சாப்பிட்டார்கள்.
சாகோ எப்படி வந்தது?
சாகோ என அழைக்கப்பட்ட ஜவ்வரசி கடந்த 1943இல் வந்தது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன உணவு வகைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது.
மேலும் இந்த சாகோ இந்தியாவிற்குள் வந்து சரியாக 80 ஆண்டுகள் ஆகின்றது. இந்த சாகோவை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் சுவையாகவும், நிறைவாகவும் இருப்பது மட்டுமல்லாமல், காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்ததால் கோடைக்கால மருந்தாக மக்கள் இதனை எடுத்து கொண்டார்கள்.
இதில், கலோரிகளில் மிகவும் அதிகமாக உள்ளது, இதனால் பெண்கள் அவர்களின் உணவுகளில் அதிகமாக சேர்த்து கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். அத்துடன் குடல் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் நிவாரணம் தருகின்றது.