நீரிழிவு நோயாளிகளும் விரும்பி சாப்பிட கூடிய சூப்பரான மரவள்ளிக்கிழங்கு அடை! 20 நிமிடத்தில் தயாரிப்பது எப்படி?
கீரைகளைப்போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்து இருக்கின்றன.
அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. அன்றாடம் சாப்பிடும் இதுபோன்ற உணவுகள் செரிமான மண்டலத்தை சீர்குலைத்து, உடல் உபாதைகள் ஏற்பட காரணமாக அமைக்கின்றன.
உடலில் தேங்கும் கழிவுகளால் நாளடைவில் குடல்சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றன.
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன.
செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கூட இதனை அச்சம் இன்றி சாப்பிடலாம்.
இத்தகைய நன்மைகளை கொண்டிருக்கும் மரவள்ளிக்கிழங்கில் அடை செய்து எப்படி ரூசிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு - ஒன்று,
- இட்லி அரிசி - 200 கிராம்
- துவரம்பருப்பு - 100 கிராம்
- கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்),
- பூண்டுப் பல் - 2
- மிளகு - 10
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 100 மில்லி
செய்முறை
மரவள்ளிக்கிழங்கைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த அரிசியைக் களைந்து, நறுக்கிய மரவள்ளிக்கிழங்குடன் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்துத் தண்ணீர்விட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து ஊறவைத்த பருப்பையும் சேர்த்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, தோலுரித்த பூண்டுப் பல் போட்டு, மிளகு, உப்பு சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை தோசைக்கல்லில் பரவலாக மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை ரெடி.