குழந்தைகளை கட்டி போடும் Breakfast ரெசிபி..! இனி வீட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமே இருக்காது
பொதுவாக காலையில் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு, அலுவலகம் செல்லும் கணவருக்கு என காலையுணவு நிறைய வகைகளில் சமைக்க வேண்டி இருக்கும்.
அப்போது வீட்டிலுள்ள பெண்கள் அடுத்த நாள் காலையில் என்ன சமைக்க வேண்டும் என்பதனை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து விடுவார்கள்.
ஏனெனின் மனிதனாக பிறந்த அனைவருக்கும் காலையுணவு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இவற்றையெல்லாம் சரியாக செய்தால் "தனி விருப்பம்" என்ற ஒரு விடயம் இருக்கும். ஒருவருக்கு பிடித்த உணவு மற்றொருவருக்கு பிடிக்காது. அதனால் நாம் அனைவருக்கும் பிடித்த வகையில் தான் சமைக்க வேண்டும்.
அந்த வகையில், காலையுணவை எப்படி வித்தியாசம் வித்தியாசமாக செய்து அசத்தலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. ஜவ்வரிசி உப்பு மா
முதலில் ( 1. 1/2 கப் ) ஜவ்வரிசியை எடுத்து ஒரு பவுலில் போட்டு நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். இந்த செயன்முறையை முதல் நாள் இரவே செய்து விட வேண்டும். ஏனெனின் ஜவ்வரிசி தண்ணீரில் சுமார் 6 மணித்தியாலங்கள் ஊற வேண்டும். தண்ணீரை வடிக்கட்டிய பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு ( 1 மேசைக்கரண்டி) பெருங்காயம்த்தூள் (1/2மேசைக்கரண்டி) சேர்த்து நன்றாக வறுக்கவும்.
கறிவேப்பிலையும், பச்சை மிளகாயும் அதுனுடன் சேர்த்து கொள்ளலாம். வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.( நறுக்கியது),இஞ்சி (1மேசைக்கரண்டி) கேரட் மற்றும் கொடை மிளகாய் (4 மேசைக்கரண்டி) அதனுடன் மஞ்சள்த்தூள் ( 1/2 மேசைக்கரண்டி) சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் 3 விநாடிகள் மாதிரி குறைத்து வைக்கவும்.
அதன் பின்னர் நிலக்கடலை ( ரோஸ்ட் செய்து வைத்தது 1 மேசைக்கரண்டி) ஆகிய பொருட்களை கலந்து நன்றாக கலந்து விட்ட பின்னர் ஜவ்வரிசியை போட்டு 2 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கினால் சவ்வரிசி உப்பு மா தயார்!
2. நோன் ஸ்டிக்கி வெஜிடபள் லேமன் சேமியா
முதலில் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, எண்ணெய் (1 மேசைக்கரண்டி ) இட்டு நன்றாக கொதிக்க விடவும். அதனுடன் (2 கப்) அளவு சேமியாவை கொதி நீரில் போட வேண்டும். சேமியா வெந்தவுடன் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரால் கழுவி விட்டு அதனை ஒரு பவுலில் போட்டு தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ( 2 மேசைக்கரண்டி) கடுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு ( 1 மேசைக்கரண்டி) சேர்த்து நன்றாக வறுக்கவும்.
கறிவேப்பிலையும், பச்சை மிளகாயும் அதுனுடன் சேர்த்து கொள்ளலாம். வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.( நறுக்கியது),இஞ்சி (1மேசைக்கரண்டி) ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் 3 விநாடிகள் மாதிரி குறைத்து வைக்கவும். இதனை தொடர்ந்து கேரட் (1) , கொடை மிளகாய்(1) ஆகியவற்றை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளவும். அதனுடன் மஞ்சள்த்தூள் (1 தேக்கரண்டி) சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பெருங்காயம் (1.2 தேக்கரண்டி) சேர்த்து அதனையும் நன்றாக கலந்து விட்டு கொள்ளவும். அந்த கலவையுடன் சேமியாவை கொட்டி நன்றாக கலந்து விட்டு கொள்ளவும். எலுமிச்சைப்பழம் (3) வெட்டி சாற்றை கலந்து விட்டு இறக்கினால் சுவையான நோன் ஸ்டிக்கி வெஜிடபள் லேமன் சேமியா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |