instant aval vadai: பத்தே நிமிடங்களில் மொறு மொறு அவல் வடை... எப்படி செய்வது?
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்டால் போதும், குழந்தைகள் தேனீருக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிதர சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இவ்வாறான நேரங்களில் குழந்தைகளுக்கு கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடும்.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட, வீட்டிலேயே வெறும் பத்து நிமிடங்களில் எவ்வாறு ஆரோக்கியமாகவும், சுவையாகவும் மொறுமொறுப்பான அவல் வடை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கலக்க தேவையான பொருட்கள்
அரைத்த அவல் (மெல்லிய போஹா)- ஒரு கப்
அரிசி மாவு-2 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது- ⅓ கப்
ஜீரகம்- 1 தேக்கரண்டி
இஞ்சி பொடியாக நறுக்கியது-½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -1 அல்லது 2
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது- சிறிதளது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - சிறிதளவு
சிவப்பு மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் போஹாவை நன்றாகக் கழுவி, தண்ணீரை முழுவதுமாக நன்கு வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 'கலக்க' தேவையானஅனைத்து பொருட்களையும் ஒரு கலவை கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
கலவை மிகவும் வறண்டதாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும். அதனையடுத்து ஒரு சிறிய எலுமிச்சை அளவுக்கு இந்த கலவையை உருண்டகளாக எடுத்து சிறிது தட்டையாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கி, வடைகளை போட்டு பொன்நிறமாக பொரித்து எடுத்தால், வெறும் பத்தே நிமிடத்தில் அருமையான சுவையில் மொறுமொறுப்பான அவல் வடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
