YouTuber இர்பான் செய்த இஞ்சி புளி சட்னி: வெறும் 15 நிமிஷத்தில் செய்வது எப்படி?
சமூக வலைத்தளங்களில் இர்பான் செய்து அசத்திய இஞ்சி புளி சட்னியின் ரெசிபி வைரலாகி வருகின்றது.
இதன்படி, 10 நிமிடத்தில் இஞ்சி புளி சட்னி எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி புளி சட்னி
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- பூண்டு - 4
- வத்தல் - 3
- புளி - 1 நெல்லிக்காய் அளவு
- இஞ்சி - 75 கிராம்
செய்முறை
முதலில் ஒரு வாணலி எடுத்து அது சூடானதும் சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பூண்டு, வத்தல் சேர்த்து வறுக்கவும். நிறம் மாறும் வரை வறுக்கவும்.
பின்னர் அதனுடன் அதில் இஞ்சி நறுக்கி சேர்க்கவும்.
வாசனை பரவிய பின்னர் புளி சேர்த்து கிளறவும்.
இந்த கலவையை ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.
அரைக்கும்போது வெல்லம் வேண்டும் என்றால் கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்.
கடைசியாக அரைத்த சட்னியின் மேல் கடுகு, எண்ணெய், கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி எடுத்தால் சுவையான இஞ்சி புளி சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |