வீட்டில் பச்சரிசியும் வெல்லமும் இருக்கா? இந்த ரெசிபியை செய்து பாருங்க
பொதுவாக இந்து கோவில்களில் பிரசாதங்களில் திருவாதிரை களி பிரதானமாக வழங்கப்படும். இந்த பிரசாதத்தை போலவே வீட்டிலும் செய்ய விரும்புவார்கள்.
இப்படி வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்படுபவர்கள் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் ரெசிபியாக கொடுத்துள்ளோம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி
- வெல்லம்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்யயும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பச்சரிசியை வறுத்து எடுக்கிறோம். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். இப்போது 50 கிராம் முந்திரி பருப்பை தேவையான அளவு நெய்யில் வறுத்து நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
முந்திரி பருப்பு வறுத்த அதே பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு கப் வெல்லம் போட்டு நன்கு கொதிக்கவிட்டு கரைய விடவும்.வெல்லம் கரைந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி பவுடரை அப்படியே போட்டு கிண்டவும்.
இது கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக ஆரம்பிக்கும் போது கைவிடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின்னர் கால் கப் நெய் ஊற்றவும். இதன் பின்னர் வறுத்த முந்திரி பரப்பை போட்ட இறக்கினால் சுவையான கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |