மருத்துவர் காலில் விழுந்த கணவர்- குழந்தையை கையில் ஏந்தியப்படி வெளியான காணொளி
இந்திரஜா ரோபோ சங்கரின் கணவர் கார்த்திக், மருத்துவர் காலில் விழுந்து பின்னர் குழந்தையை கையில் வாங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
மருத்துவர் காலில் விழுந்த கார்த்திக்
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் MR& MRS சின்னத்திரையில் போட்டியாளர்களாக இந்திரஜா - கார்த்திக் கலந்து கொண்டார்கள்.
சில எபிசோட்கள் கடந்த போது இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அதனை வீட்டிலுள்ளவர் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பது வரையிலான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திரஜாவின் கணவர் மருத்துவரின் காலில் விழுந்த பின்னர் குழந்தையை வாங்கியது ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |