உலகத்தின் மிகப்பெரிய பூ இது தானா? இதன் அம்சம் என்ன... அரிய புகைப்படம்
இந்தோனேஷியாவில் சுற்றுலா சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த காடுகளுக்குள் ட்ரெக்கிங் சென்றிருக்கிறார்.
அப்போது காட்டுக்கு நடுவே வித்தியாசமான பூ ஒன்றை பார்த்திருக்கிறார். அலங்காரம் செய்ய உதவும் பிளாஸ்டிக் பூ போல அது இருந்தாலும், அது உண்மையான பூ தான் என்பது சில நிமிடங்களில் அவருக்கு தெரிய வந்திருக்கிறது.
இதன் பிம், அந்த பூவினை புகைப்படம் எடுத்து அவர் சோசியல் மீடியாவில் பதிவிட கொஞ்ச நேரத்தில் அந்த புகைப்படம் வைரலாகிவிட்டது.

காரணம் அந்த பூ வின் வித்தியாசமான தன்மை தான். அந்த பூ, உலகின் மிகப்பெரிய பூவான ரஃபெல்சியா அர்னால்டி (Raffelsia Arnoldii).
இதனை கார்பஸ் மலர் என்றும் அழைக்கிறார்கள்.
இவை அரேசியே மலர் குடும்பத்தைச் சார்ந்தது. சுமார் 3 மீட்டர் வரை வளரக் கூடிய இந்த மலர் சராசரியாக 7 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுநர்கள்.