அர்ஜுன் டெண்டுல்கர் அதை செய்யவில்லை... உண்மையை உடைத்த மும்பை பயிற்சியாளர்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி கோப்பையை வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்ப்பார்த்த அணிகளான சென்னை, மும்பை அணிகள் ஆரம்பத்திலேயே ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறி இருந்தது.
மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருந்தது. இதனால் மும்பை அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படது.
இதுகுறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேசுகையில், ஷேன் பாண்ட் மும்பை அணி இளம் வீரர்கள் இருந்தும் தொடர் முடிவடைய போது தான் அவர்களுக்கு க்ளிக் ஆகியது.
ரோகித் சிறப்பாக செயல்ட்டார்
எங்கள் அணியின் மீது இருந்த செயல்பாடுகளால் எங்கள் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் இருந்தனர்.
இதனால் அவர்களை தயார் படுத்த மிகவும் சவாலாக இருந்தது. கேப்டனாக ரோகித் சர்மா தன் பணியை சிறப்பாக செய்தார். ஒவ்வொரு வீரர்களிடம் பேசி இளம் வீரர்களை தயார் செய்தார்.
டிம் டேவிட் பிரமாதம்
டிம் டேவிட் போன்ற இளம் வீரர் தொடர் முடிவடையும் நேரத்தில் மிகவும் சிறப்பாக விளையாடினார். இதனால் அடுத்தாண்டிலும், சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நடப்பு சீசனில் பும்ராவும் எங்களுக்கு முக்கிய போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினார். எங்களுக்கு சில போட்டிகளில் வெற்றி வாய்ப்பு இருந்தும் வீணாக்கி விட்டோம்.
அர்ஜூன் டெண்டுல்கர்
அர்ஜூன் டெண்டுல்கர் போட்டியில் இடம்பெறாதது குறித்து பல கேள்விகள் எழுப்பட்டது. ஆனால் அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பில்டிங்கில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.
அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த சீசனிலாவது அவர் அதை சரியாக செய்வார் என நம்புகிறேன்.
இனி வரும் சீசன்களில் சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.