அதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் - அவசியம் என்ன தெரியுமா?
ஆசியாவில் வெப்பமண்டல காடுகள் முதல் வறண்ட பாலைவனங்களில் வாழும் உயிரினங்களில் ஒன்று தான் எறும்புதின்னிகள்(Pangoli).
இதற்கு பல இடங்களில் பலவிதமான வாழ்விடங்கள் உள்ளன. இந்தியாவில் காணும் காட்டுயிர்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இரவாடிப்பாலூட்டியாக இருக்கும் எறும்பு தின்னிகளின் உடலமைப்பும் வாழும் முறையிலும் தனித்துவமானவை.
இதனை எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு உள்ளிட்ட பல பெயர்களில் அந்தந்த பகுதிகளில் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினம் உலகில் எட்டு வகை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளன.
அதிலும் ஆசியாவில் நான்கு எறும்புதின்னி இனங்கள் உள்ளன. இந்திய எறும்புதின்னி (Indian Pangolin), சீன எறும்புதின்னி (Chinese Pangolin), சுந்தா எறும்புதின்னி (Sunda Pangolin) மற்றும் பலவன் எறும்புதின்னி (Palawan Pangolin) ஆகியவையாகும்.
இந்தியாவில் காணப்படும் எறும்புதின்னிகள் உயர்ந்த இமய மலைபோன்ற பகுதிகளிலும் வறண்ட பகுதிகளும் வாழ்கின்றன. சுமாராக 2500 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்களிலும் காணலாம்.
உதாரணமாக, ஆசிய நாடுகளான பங்களாதேஷ் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வாழும்.
அந்த வகையில், எறும்பு தின்னிகளை நம்மிள் பலரும் பார்த்திருப்போம். ஆனால் அது எறும்பு தின்னி தான் எமக்கு தெரிந்திருக்காது. அப்படி இருப்பவர்கள் இந்த பதிவில் எறும்பு தின்னிகளின் வாழ்வியல் அம்சங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கை முறை
இந்தியாவில், தமிழகத்தில் அதிகளவு காணப்படும் எறும்பு தின்னி 'இந்திய எறும்புதின்னி' எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை போன்ற காடுகளில் வாழ்கின்றன.
எறும்பு தின்னிகள் வெளியில் வாராமல் மறைந்து வாழும் இயல்பு கொண்டவையாகும். அதனை பார்க்கும் பொழுது பெரிய செதில்கள் கொண்ட தோற்றத்தை கொண்டிருக்கும். இது அவைகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் கவசமாகும். காடுகளில் விலங்குகளை வேட்டையாடும் புலி போன்ற விலங்குகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள செதில்களை பயன்படுத்துகிறது.
வேட்டை விலங்குகள் தன்னை தாக்க வரும் பொழுது தற்காப்புக்காக தன்னை ஒரு பந்து (வால்வேஷன்) போன்று சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்கிறது. அப்போது எறும்பு தின்னியின் செதில்களின் நிறம் சுற்றுப்புறங்களில் உள்ள நிறத்திற்கு மாறுகிறது.
பச்சோந்தி போன்று அல்லாமல் மோப்ப சக்தியை பயன்படுத்தியும் நீண்ட கால் நகங்களை பயன்படுத்தியும் மண் மேடுகள் மற்றும் பள்ளங்களை தோண்டி உணவு தேடுகிறது. பூமிக்குள்ளிருந்து 3 முதல் 5 மீட்டர் ஆழம் வரை தோண்டி அங்குள்ள கரையான்களை பிடித்து சாப்பிடும். மற்ற விலங்குகளை விட எறும்பு தின்னிகளின் செதில்கள் முன் கால்கள் வரை வலிமை கொண்டதாக இருக்கும். வேட்டையாடும் நேரங்களில் அல்லாமல் மற்ற நேரங்களில் பொந்துகளில் உறங்கும்.
வியாபாரப் பொருளாக பார்ப்பது ஏன்?
உலகில் எறும்பு தின்னிகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.இதனால் அந்த நாடுகளில் முக்கிய வியாபார பொருட்களில் ஒன்றாக உள்ளது. இறைச்சிக்காகவும், மருந்துகள் தயாரிப்புக்கான முக்கிய பொருளாகவும் பார்க்கப்படுவதால் இந்த விலங்கை தேடி தேடி வேட்டையாடுகிறார்கள்.
இதன் உடல் பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை தடுப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர் முடிந்தளவு முயற்சி செய்து வருகிறார்கள்.
கிராமப்புறங்களில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் நாட்டுப்புற வைத்தியங்கள் அதிகமாக செய்வது வழக்கம். இதற்கு எறும்பு தின்னிகளின் செதில்கள் பயன்படுத்துப்படுகிறது. எட்டு வகை எறும்புதின்னிகளின் இனங்கள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விலங்களை கடத்துவது சட்டவிரோதமான செயல். எறும்பு தின்னிகள் இக்காலங்களில் அழிந்து வருவதற்கு கடத்தல், உணவு இன்மை, வாழ்வியல் இன்மை, உணவுக்காக வேட்டையாடுதல், உள்ளிட்டவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
எங்குள்ளது?
இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மாத்திரம் எறும்புத்தின்னிகள் பாதுகாக்கப்படுகின்றன. அதில், இந்தியப் பாங்கோலின் என அறியப்படும் எரும்புத்தின்னிகள் அழுங்கு தான் இருக்கிறது என்றும் அறியப்பட்டுள்ளது.
எறும்பு தின்னி கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்க் கொண்டு உயிர்வாழும். சுமாராக 30 ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் என்பதால் பலரும் மூடநம்பிக்கை காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.
மேலும் அவற்றுக்கு ஆபத்து வரும் சமயத்தில், வெறுப்பூட்டுகிற, துர்நாற்றம் கொண்ட திரவத்தை ஆசனவாய்க்கு அருகில் இருக்கும் சுரப்பிகளிலிருந்து சுரக்கும். இந்த நாற்றம் காரணமாக இதனை கொல்ல வரும் விலங்குகள் தப்பிச் செல்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |