இந்தியன் வங்கியில் வேலை- டிகிரி முடித்தவர்களுக்கு அரசு நிரந்தர வேலை வாய்ப்பு- முயற்சித்து பாருங்க
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுவா பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது ஒரு சவாலான விடயமாக பார்க்கப்படுகிறது. சிலருக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விடும், ஆனால் இன்னும் சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்காது.
இதன்படி, இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான 6 பணியிடங்கள் உள்ளன. அதற்கு டிகிரி முடித்தவர்கள் இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை செய்யலாம் என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எதிர்வரும் 21.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
விவரங்கள்
1. கல்வித் தகுதி: B.E. (Fire) from National Fire Services College (NFSC) Nagpur OR B Tech / BE in Fire Technology / Fire Engineering/ Safety and Fire Engineering OR Bachelor’s degree and Divisional Offices course from National Fire Service College, Nagpur OR Bachelor’s degree and Graduate from Institute of Fire Engineers India / Institute of Fire Engineering – UK OR Bachelor’s degree and Station officer course from National Fire Service College, Nagpur படிப்பு அவசியம். 3 வருட பண அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. வயது: 01.11.2025 அன்று 23 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பது அவசியம்.
3. சம்பளம்: கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படும். 4. தேர்வு: பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

5. விண்ணப்பிக்கும் முறை: பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ( https://indianbank.bank.in/wp-content/uploads/2025/11/Application-format-1.pdf) என்ற இணையதளப் பக்கத்திற்கு உங்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சரியான முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
6. முகவரி: Chief General Manager (CDO & CLO) Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.
7. இறுதி தேதி: 21.11.2025
8. விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 175 வேலை பற்றிய போதுமான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உங்களுக்கு மேலதிகமாக தகவல் தேவை என்றால் கீழுள்ள விவரங்களை பார்க்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |