13 வயதில் ரூ.100 கோடி நிறுவனமா?இளம் தொழிலதிபரான திலக் மேத்தா!
இந்தியாவின் இளம் வயது தொழிலதிபர் என்ற பெருமையை 13 வயதில் சொந்தமாக்கியவர் தான் திலக் மேத்தா.
திலக் மேத்தா
திலக் மேத்தா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் விஷால் மேத்தா-காஜல் மேத்தா. இன்று இளம் வயதிலேயே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகமாகவும், கடின உழைப்புக்கு உதாரணமாகவும் திகழும் இவரின் முதல் முயற்சி இளைஞர் நலன் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது.
மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரான இவர் தனது 13 வயதில் சொந்தமான நிறுவனம் ஒன்றை தொடங்கி இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.
பார்சல் உணவுகளை டெலிவரி செய்யும் மும்பையின் பிரபலமான டப்பாவாலா(Dabbawalas) நிறுவனத்தை எடுத்துக்காட்டாக கொண்டு இவர் உள்ளூர்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யக் கூடிய வகையில் “Paper n Parcels” என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
2018ம் ஆண்டு இணையதளம் ஒன்றை உருவாக்கி டெலிவரி தொடர்பான ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸை திலக் மேத்தா நிறுவினார்.
சொத்து மதிப்பு
தன்னுடைய விடாமுயற்சியால் “Paper n Parcels” டெலிவரி நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியை அண்மித்தது. அதுமட்டுமன்றி பல இந்தியர்கள் திலக் மேத்தாவின் “Paper n Parcels” நிறுவனத்தால் வேலைவாய்ப்பையும் பெற்றனர்.
தற்போது 200க்கும் மேற்பட்ட நேரடி ஊழியர்கள் மற்றும் 300 டப்பாவாலாக்கள் இருக்கின்றனர. மேலும், தினசரி 1200 டெலிவரிகளை இந்நிறுவனம் மேற்கொள்கின்றது.
2021ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இவரின் சொத்து மதிப்பு ரூ.65 கோடியைத் தாண்டியது. இதனால் அவரது மாத வருமானம் ரூ.2 கோடியாக உயர்ந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |