INDvsENG:15 வருட கனவை நிஜமாக்குமா இந்தியா - கேப்டன் பும்ராவின் ப்ளான் என்ன? பரபரப்பு ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி இன்று 01ம் தேதி இந்திய மணியளவில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ இங்கிலாந்து அணி அறிவித்தது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர்.
மேலும் மிடில் ஆர்டரில் ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் என நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய வீரர்களும் இடம் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இங்கிலாந்து அணி தனது பவுலிங் படையில் 4 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுடன் சேர்த்து 5 பேர் ஆகும். 5வது பவுலரின் இடத்திற்கு கூடுதலாக ஒரு முழு நேர பேட்ஸ்மேனை சேர்த்துள்ளனர்.
இந்திய அணியை பொறுத்த வரை இந்திய அணி வழக்கமான ஃபார்முலாவில் இருந்து வெளியே வந்து 4 வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்திவிட்டு, ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது ஒரு ஸ்பின்னரை சேர்க்க வேண்டும். கொரோனா காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இதன் மூலம் இந்திய அணியின் 36வது டெஸ்ட் கேப்டனாக, பும்ரா செயல்பட உள்ளார். 1986ஆம் ஆண்டு கபில் தேவ்க்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு வந்துள்ளது.

பும்ரா மகிழ்ச்சி
மேலும், கேப்டன் பதவி குறித்து பும்ரா தெரிவிக்கையில், “அழுத்தம் இருக்கும் போது பெறும் வெற்றிதான் சுவையாக இருக்கும். எப்போதும் பொறுப்பை ஏற்க விரும்பும் நான் சவால்களை விரும்பி எதிர்கொள்கிறேன்.
தொடர்ந்து, ஒரு வீரராக எப்போதும் கடினமான தருணத்தில் உங்களை சோதிக்க வேண்டும். மேலும் நிறைய கிரிக்கெட் வீரர்களிடம் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் முன்னேறி சிறந்தவர்களாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு முறை நான் எம்எஸ் தோனியிடம் பேசியதை நினைவில் வைத்துள்ளேன். அவர் இந்தியாவை முதல் முறையாக வழி நடத்துவதற்கு முன்பாக எந்த அணிக்கும் கேப்டனாக செயல்பட்டதில்லை என்று கூறினார்.
தற்போது அவர் வரலாற்றின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். எனவே இதற்கு முன்பு நான் என்ன சாதித்தேன் என்பதை விட்டுவிட்டு அணியின் வெற்றிக்காக எப்படி உதவலாம் என்பதில் கவனம் செலுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்பதே எனது வாழ்வின் மிகப்பெரிய கனவு என்ற நிலையில் கேப்டனாவது எனது கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எனவே இந்திய அணியை பொறுத்த வரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழு பலத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

15 வருட கனவு
இன்று நடைபெறப்போகும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் எகிறியுள்ளது.
புள்ளிவிவரம்
1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 130 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 49 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து வலுவான அணியாக காணப்படுகிறது.
இந்தியா 31 போட்டிகளில் வென்றுள்ளது, 50 போட்டிகள் டிராவில் முடிந்தன. போட்டி நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் 35 வெற்றிகளை குவித்துள்ள இங்கிலாந்து எப்போதுமே வலுவான அணியாக காணப்படுகிறது. மறுபுறம் இங்கிலாந்து மண்ணில் வரலாற்றில் இதுவரை இந்தியா வெறும் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

ப்ளேயிங் 11
England (Playing XI): Alex Lees, Zak Crawley, Ollie Pope, Joe Root, Jonny Bairstow, Ben Stokes(c), Sam Billings(w), Matty Potts, Stuart Broad, Jack Leach, James Anderson
India (Playing XI): Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Ravindra Jadeja, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Jasprit Bumrah(c)