இந்தியாவின் ஸ்காட்லாந்து 'குடகு' இந்த இடத்திற்கு போனதுண்டா? சொர்க்கத்தின் வாசல்
இந்தியாவில் பல இடங்களை நாம் பார்த்து ரசித்து இருந்தாலும் சில இடங்களை பார்ப்பதற்கு தவற விட்டிருப்போம். அப்படி ஒரு இடம் தான் இந்த இந்தியாவின் ஸ்காட்லாந்து 'குடகு' இதை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
இந்தியாவின் ஸ்காட்லாந்து 'குடகு'
இந்த இடம் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில், 1,525 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்றுப்படி க்ரோததேசம் என்பது தான் பின்னாளில் 'கொடவா' என மாறியது.
1956ல் கர்நாடகாவுடன் இணையும் முன், குடகு தனி மாநிலமாக இருந்தது. இது காபி உற்பத்திக்கு மிகவும் பெயர் போன இடமாகும். அத்துடன் நாட்டில் அதிக மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று.
இம்மாவட்டத்தில், கொடவா, துளு, கவுடா போன்ற பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் கொடவா சமூகம், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரியளவில் உள்ளனர்.
இந்த இடத்தில் கண்ணை கவரும் மூடுபனி மலைகள், பசுமையான காடுகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், வளைந்த தெருக்கள் என குடகை வாழ்நாளில் மறக்க முடியாத இடமாக காணப்படுகிறது.
இங்கு பார்வை இடும் இடங்களாக ராஜா சீட், அபே நீர்வீழ்ச்சி, பால்வார் நீர்வீழ்ச்சி, ஓம்காரேஸ்வரா கோவில், பைலகுப்பா, தலை காவேரி, துபாரே யானைகள் முகாம் உள்ளன.
இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருப்பதால், தலை காவேரி, புஷ்பகிரி, பிரம்மகிரி என மூன்று சரணலாயங்கள், நாகரஹொளே தேசிய பூங்கா உள்ளன. இந்த வன விலங்குகளில், யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை உள்ளன.
இந்த இடம் பொதுவாக தண்டியண்டமோல், பிரம்மகிரி, புஷ்பகிரி போன்ற மலை சிகரங்களில் ஏற குடகு பிரபலமானது. இங்கு யானை சவாரி, ஆற்று நீரில் 'படகு ராப்டிங்' செய்யலாம். எனவே இந்தியாவிற்கு சென்றால் இந்த இடத்தை பார்க்க தவற வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |