சென்னையில் இருந்திட்டே குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா போகணுமா? அட்டகாசமான இடங்கள் இதோ
இந்தியாவில் சென்னையில் வசிப்பவர்கள் வார இறுதி நாட்களில் குறைந்த செலவில் சுற்றிப்பார்க்ககூடிய சுற்றுலா தலங்களை பார்வையிட இந்த பதிவில் முழு விபரங்களையும் தெளிவாக பார்த்துக்கொள்ளலாம்.
சென்னை சுற்றுலா தலங்கள்
பாண்டிச்சேரியில் இருக்கும் சென்னைக்கு தெற்கே உள்ள லிஸ்டிக் கடற்கரை. இது பிரெஞ்சு மற்றும் இந்தியக் கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும் புதுச்சேரியில் சுற்றிப் பார்க்கப் பல இடங்கள் இருக்கிறது.
பிரெஞ்ச் காலனித்துவ கட்டிடக்கலை ரசிக்கலாம். அதன் அட்டகாசமான கடற்கரையில் காலாற நடக்கலாம். அடுத்து காஞ்சிபுர கோயில் தலைநகர் இந்த இடத்திற்கு முழுக்க முழுக்க ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் செல்ல முடியும்.
காஞ்சிபுரத்தைக் கோயில்களின் நகரம் என்றும் குறிப்பிடுவார்கள். அந்தளவுக்குப் பல முக்கியமான கோயில்களைக் கொண்ட ஊராகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காமாக்ஷி அம்மன் கோவில் எனப் பல முக்கிய கோயில்கள் உள்ளன.
அடுத்து பழவேற்காடு இது சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஊரில் தான் பழவேற்காடு ஏரி இருக்கிறது.
நமது இஸ்ரோ ராக்கெட்களை அனுப்புமே அந்த ஸ்ரீஹரிகோட்டா இங்கே தான் இருக்கிறது. இங்குச் சென்றுவிட்டு அப்படியே சுமார் 1.30 மணி நேரம் பயணித்தால் தடா எனப்படும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம்.
சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீசிட்டி அருகே அமைந்துள்ள இந்த இடத்திற்குச் சென்று ரசிக்க முடியும். அடுத்து பிச்சாவரம் சதுப்புநில காடு. கடலூரில் சிதம்பரம் அருகே அமைந்துள்ள இந்த பிச்சாவரம் சதுப்புநில காடுகள் தான் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகளாகும்.
இயற்கையை ரசிக்க விரும்பினால், கண்ணை மூடிவிட்டு இந்த இடத்திற்குச் சென்றுவிடலாம். வார இறுதி நாட்களை கழிக்க ஒரு மிகச் சிறந்த இடமாக இது இருக்கும். சிக்கலான நதி அமைப்பும் கால்வாய் வலையமைப்பும் இதற்குத் தனி அழகைத் தருகிறது. படகு சவாரி மூலம் பிச்சாவரம் வனப்பகுதியைக் கண்டு ரசிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |