ஜூன்ஸ் பேண்ட் போட்ட மனைவி... கணவன் போட்ட கண்டிஷனால் இறுதியில் நேர்ந்த விபரீதம்!
ஜம்தாரா பகுதியில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்தோளன் என்ற நபருக்கு இளம்பெண் ஒவருடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது மனைவியுடன் அடிக்கடி அந்தோளன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இதற்கு காரணமே மனைவி அடிக்கடி ஜூன்ஸ் உடை அணிந்து செல்வது தான். திருமணத்திற்கு முன்பு இருந்தே எப்பொழுதும் ஜீன்ஸ் அணியும் அந்த பெண் அதன் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கணவன் கண்டித்து வந்துள்ளார். அப்படி ஒரு நிலையில், சமீபத்தில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது மனைவி ஜீன்ஸ் அணிந்து சென்றுள்ளார்.

ஜீன்ஸ் பேண்டால் சண்டை
இதனால், வழக்கம் போல மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு உருவாகி உள்ளது. இந்த முறை சண்டை பெரியதாக அந்தோளன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில், அந்தோளன் அதிகம் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், புதருக்குள் தவறி விழுந்து, உடலில் நிறைய காயங்களுடன் வீட்டிற்கு அவர் திரும்பியதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு
தொடர்ந்து, அந்தோளனின் உடல் நிலை மோசமாக ஆரம்பிக்கவே, அவரது குடும்பத்தினர் உடனே ஜம்தாரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனிக்காமல் அந்தோளன் உயிரிழந்தார். இதனால், மகனின் மரணம் குறித்து போலீசாரிடம் புகார் ஒன்றையும் அந்தோளனின் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்த தகராறில், மனைவி தான் தனது கணவரை கொலை செய்திருக்கிறார் என்றும், வெளியே அழைத்துச் சென்ற போது, ஆயுதத்தால் கணவரைக் குத்தி கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
விசாரணை செய்த போலீசார் இளைஞரின் பிரேத பரிசோதனை வந்த பிறகு தான், அவரின் மறைவுக்கான கரணம் குறித்து தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.