சிவபெருமானை திருமணம் செய்த பெண்: கோலாகலமாக நடந்த திருமணம்
கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், கடவுளிடம் நல்ல வாழ்க்கைத்துணை வேண்டும் என வேண்டுபவர்களையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இங்கு கடவுளையே வாழ்க்கைத்துணையாக்கிய சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்று நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
அந்தவகையில், சிவபெருமானை திருமணம் செய்துக் கொண்ட பெண் பற்றிய தகவல் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சிவபெருமானை திருமணம் செய்த பெண்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் 27 வயதான கோல்டி ரைக்வார் என்றப் பெண் சிவபெருமானை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் சிவபெருமானின் வெள்ளை திருவுருவ சிலைக்கு அலங்காரம் செய்து தேரில் வைத்து ஊர்வலம் ஏற்றி வந்தார்கள். இந்த திருமணம் படகான் கேட் வெளியில் அமைந்துள்ள பிரம்மகுமாரி ஆசிரமத்தில் நடத்தப்பட்டது.
குறித்த பெண் ஆன்மீக கல்வியை முடித்து விட்டு பாரகானில் உள்ள பிரஜாபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரிய விஸ்வவித்யாலயாவில் கடவுளுக்கு சேவை செய்திருக்கிறார்.
அப்போது தான் சிவபெருமானை திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொண்டதாக சொல்லியிருக்கிறார். மேலும், இவருக்கு சிறுவயதில் இருந்து சிவபெருமானை திருமணம் செய்துக் கொண்டு துணைவியாக இருக்க வேண்டும் என்று சிவபெருமான் என்னை துணையாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி என்றும் அவர் தன்னை ஆதரிப்பார் என்றும் சொல்லியிருந்தார்.
இந்த திருமணத்திற்கு பலரும் சம்மதம் தெரிவிக்க திருமண பத்திரிக்கை எல்லாம் அச்சிடப்பட்டு, ஊர்வலம் நடாத்தி விருந்தும் வைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |