கடவுளை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்: இது தான் காரணமா?
கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், கடவுளிடம் நல்ல வாழ்க்கைத்துணை வேண்டும் என வேண்டுபவர்களையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இங்கு கடவுளையே வாழ்க்கைத்துணையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள நரசிங்புரா கிராமத்தில் வசிப்பவர் தான் பூஜா சிங் (வயது 30) அரசியல் அறிவியலில் முதுகலை படித்துள்ளார்.
இவர் விஷ்ணு பகவானை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுள்ளார். இத்திருமணத்திற்கு இவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தாயார் ஆதராவாக இருந்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் பலருக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 8 ஆம் திகதி சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
காரணம்
திருமணத்திற்குப் பிறகு திருமண தகராறுகளால் பாழடைந்த வாழ்க்கையில் விருப்பமில்லை எனவும் அற்ப விஷயங்களில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
தகராறில் அவர்களின் வாழ்க்கை கெட்டுப்போகும், இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால் தாக்குர்ஜியை (விஷ்ணு பகவான்) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று பூஜா கூறியுள்ளார்.
தாக்குர்ஜி என்றால் மக்களை காக்கும் நபர் என அர்த்தமாம். அந்த வகையில் மக்களையும் உலகையும் காக்கும் விஷ்ணுவிற்கு இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்திருமணத்திற்காக குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்க கஷ்டப்பட்டதாகவும் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் சிறிய கோவில் ஒன்றை அமைத்துள்ள பூஜா சிங் அதில் தினசரி பூஜைகளை நடத்தவுள்ளராம்.