நீச்சல் குளத்துடன் பறவைகளுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்! வியக்க வைக்கும் புகைப்படம்
அடுக்கு மாடி குடியிருப்பில் மக்கள் வசித்து வரும் மனிதர்களை அவதானித்திருக்கும் நாம் தற்போது பறவைகளுக்கும் 5 லட்சம் செலவு செய்து அடுக்குமாடி குடியிருப்பு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
11 மாடி ரெடிமேட் அபார்ட்மெண்ட்
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ஸ்ரீதுன்கர்கர் என்ற இடத்தில் உள்ள டோலியாசர் கிராமத்தில் பறவைகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த பறவையின் அபார்ட்மெண்ட் 11 மாடிகள் கொண்டது.
பறவைகள் குறிப்பதற்கு நீச்சல் குளம் முதற்கொண்டு அனைத்து வசதிகளும் இருக்கின்றது. இந்த குடியிருப்பில் சுமார் 1100 பறவைகள் வாழலாம்.

நாடகம்னாலும் நியாயம் வேணாமா? பிரபல டிவி சீரியலுக்கு வந்த சோதனை
பறவைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்
இந்த குடியிருப்பில் பறவைகள் வந்து கூடு கட்டலாம். மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை தயார் செய்ய சுமார் ரூ.5 லட்சம் செலவானது என கூறப்படுகிறது.
எந்தப் பக்கத்திலிருந்தும் பறவை வந்து குடியேறும் வகையில், குவிமாடம் வடிவில் இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல பறவைகள் ஏற்கனவே வந்து வாழத் தொடங்கியுள்ளன.
