அடிக்கடி பசி உணர்வு ஏற்படுகிறதா? அப்போ இந்த நோய்கள் இருப்பது உறுதி
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. சரியான தூக்கமும் சரியான உணவும் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
நல்ல ஆரோக்கியத்திற்கு அதிகமாக சாப்பிடுவது அவசியம் சிலரின் நம்பிக்கையாகும். உணவு நமது உடல் உழைப்பைப் பொறுத்து சாப்பிட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர்.
அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. சில மனிதர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். உணவு சாப்பிட்ட பிறகும் பசி எடுக்கும்.
உங்களுக்கும் தேவைக்கு அதிகமாக பசி எடுத்தால், அதை சாதாரணமாக விட கூடாது. இது பல நோய்களாலும் ஏற்படலாம். எனவே இது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அடிக்கடி பசி வரும் காரணம்
தைராய்டு - சில சமயங்களில் தைராய்டு இருந்தாலும் கூட ஒருவர் அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இதனால், நோயாளிக்கு வயிறு காலியாக இருப்பது போல் தோன்றும், இதனால் அவருக்கு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
நீரிழிவு நோய் - நீரிழிவு நோயும் அதிகப்படியான பசியை ஏற்படுத்தும். நீரிழிவு நோயில் குளுக்கோஸ் செல்களை அடைய முடியாது. இதனால் ஆற்றலைப் பராமரிக்க மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும். இதற்கு அதிக சக்கரை அளவும் ஒரு காரணமாகலாம்.
மன அழுத்தம் மற்றும் கோபம் - நீங்கள் கோபமாக இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பசியை உணர ஆரம்பிக்கிறார்கள். அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹார்மோன் பசியின் மீது நேரடி விளைவை ஏற்படுத்தும். இதன் காரணத்தால் உங்களுக்கு அதிகமாக பசி ஏற்படும்.
புரதக் குறைபாடு - தற்போது பலருக்கு புரதக் குறைபாடு காணப்படுகின்றது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பசிக்கும். புரதக் குறைபாடு இருக்கும்போது, நம்மை வயிறு நிரம்பியதாக உணர வைக்கும் ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தான் நமக்கு அதிக பசி ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |