ஹீமோகுளோபின் அளவு குறைவா உள்ளதா? அஜாக்கிரதையாக இருக்காதீங்க
நமது உடம்பில் ஹீமோகுளோபின் என்று கூறப்படும் இரத்தத்தின் அளவு குறையும் போது பல பிரச்சினைகளை நாம் சந்திக்கக் கூடும்.
ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதம் ஆகும். இவை ரத்த சிவப்பக்களில் இருக்கும் நிலையில், இதன் அளவு குறைந்தால் ரத்த சோதகை ஏற்படுகின்றது.
ரத்த சோகை ஏற்பட்ட சில உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைந்தால், சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், தலைவலி என பல பிரச்சினைகள் ஏற்படும்.
13.5 முதல் 17.5 கிராம் ஒரு ஆணுக்கு 13.5 முதல் 17.5 கிராம் மற்றும் பெண்ணுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை டெசிலிட்டருக்கு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்
ரத்த சிவப்பணுக்கள் உருவாக தேவையான இரும்புச்சத்துள்ள உணவுகள் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
மாதுளை, பேரிட்சை, பீட்ரூட் இவற்றினை எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
தினமும் ஒரு கைபிடி வேர்கடலை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். அதுமட்டுமில்லாமல் பூசணி விதைகள் பலவிதமான சத்துக்களை கொண்டுள்ளதால் அதனையும் கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
நீர்ச்சத்து அதிகம் கொண்டு தண்ணீர் பழத்தினை எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபினை அதிகரிக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |