இந்த பயிற்சியை தினமும் செய்ங்க.. 5 கிலோ வரை எடை குறையும்
தற்போது இருப்பவர்கள் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.
ஏறிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விடலாம் என ஜிம்மிற்கு சென்று கடுமையான ஒர்க்கவுட் செய்வார்கள். ஆனாலும் சிலருக்கு உடல் எடை குறைவது போன்று தெரியாது.
கஷ்டமான உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்ற கட்டுக்கதை இருக்கிறது. மாறாக நாம் சில எளிய பயிற்சிகளை செய்தும் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
அந்த வகையில், எடை தூக்குதலுக்கு இணையான பலனை incline walking தருகிறது. சுமாராக ஒருவருக்கு 5 கிலோ வரை எடையை குறைக்க உதவியாக இருக்கிறது.

இவ்வளவு பலன்களை பெற incline walking எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதையும் அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
சாய்வான நடைபயிற்சி vs வழக்கமான நடை பயிற்சி
நம்மிள் பலரும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறைந்து விடும் என தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடைபயிற்சி செய்வதை சாய்வான நடைப்பயிற்சி செய்யும் பொழுது அதிகமான பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
சுமாராக 5% ஏற்றமான பகுதியில் நடப்பது வழக்கத்தை விட கலோரிகளை அதிகமாக குறைக்க உதவியாக இருக்கிறது. கால்கள், தொடை பகுதியில் உள்ள தசைகளை இது கடுமையாக இயக்கி அங்குள்ள கொழுப்பை கரைக்கும்.

நீண்ட நேரம் வொர்க்-அவுட் செய்யும் பொழுது கூட எரிக்கப்படாத கொழுப்பு கரையும். அதே சமயம் இவ்வாறு நடக்கும் பொழுது மெட்டபாலிக் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.
5 கிலோ வரை எடை குறைக்கணுமா?
5 கிலோ வரை எடை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும். இதனை எளிமையாக கூறினாலும் துல்லியமாக பார்க்கும் பொழுது 1 கிலோ கிராம் கொழுப்பை கரைக்க 7700 கலோரிகளை எரிக்கப்பட வேண்டும்.
ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கும் ஒருவரின் உடலில் இருந்து 80 முதல் 100 கலோரிகள் எரிக்கப்படுகிறது என்றால் 5 கிலோகிராம் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் 5 முதல் 6 கிலோமீட்டர் தூரம் வாரத்திற்கு 5 நாட்கள் நடக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால் ஆரோக்கியமான முறையில் உங்களுடைய உடல் எடையை குறைக்க முடியும். ஒரே தடவையில் முடியாதவர்கள் காலை, மாலை என இரு வேளைகளும் பிரித்து நடக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |