Kidney Stone: சிறுநீரக கற்களால் அவதிப்படுறீங்களா? எளிதாக கரைக்கும் உணவுகள் இதோ
சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புக்கள் இவற்றினால் ஏற்படும் கடினமான படிவங்கள் ஆகும்.
இவை நாளடைவில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் தொந்தரவை ஏற்படுத்தும். இதனால் சிறுநீர்ப் பாதையில் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சனை ஏற்படும்.
சிறுநீரகத்தில் படிந்திருக்கும் கற்களின் அளவைப் பொறுத்தே சிகிச்சைகள் காணப்படும். அளவு குறைவாக இருந்தால் தண்ணீர் குடிப்பது, மருந்துகள் எடுத்துக் கொள்வதால் பிரச்சனை சரியாகும். அதுவே அளவில் பெரிய மாற்றம் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டுமாம்.

ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் படி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளால் சிறுநீரக கற்களை எளிதில் கரைத்துவிட முடியும்.
அந்த வகையில் நாம் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு உதவும் உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கற்களை கரைக்கும் பானங்கள்
பார்லி தண்ணீர் இதற்கு அதிகமாக உதவி செய்கின்றது. இவை சிறுநீரக நச்சுக்களை நீக்கி, கற்களின் அடர்த்தியினைக் குறைத்து சிறுநீர் மூலமாகவே வெளியேற்ற உதவும்.
இதே போன்று எலுமிச்சை சாறும் உதவுகின்றது. இதிலுள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே காணப்படும் கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது.

உடம்பை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு இளநீர் உதவுகின்றது. இவை சிறுநீரகப் பாதையில் படியும் தேவையற்ற தாதுக்களை குறைப்பதுடன், கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கின்றது.
மாதுளையில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்டு மற்றும் இயற்கை அமிலங்கள் கற்கள் உருவாக காரணமான தாதுக்களை தடுப்பதுடன், சிறுநீரக கற்கள் வராமலும் பாதுகாக்கின்றது.

நமது அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் அதிகமாக குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவை சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கின்றது.
மேலும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உணவில் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு, சிறுநீரக கற்களை ஏற்படுத்துமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |