திருமண வாழ்வில் இதை மட்டும் பண்ணாதீங்க பிரிவு உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும் பிரிவு அற்றதாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண உறவில் தவிர்க்க வேண்டியவை
சாணக்கிய நீதியின் பிரகாரம் மகிழ்ச்சியான திருமணவாழ்க்கைக்கு பேச்சு மற்றும் செயலில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமற்ற அல்லது தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது திருமணம் எனும் அழகிய பந்தத்தை உடைத்துவிடும். இந்த தவறை திருமண வாழ்வில் ஒரு போதும் செய்ய கூடாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
திருமண வாழ்க்கை காலம் முழுவதும் ஆரம்பித்தில் இருப்பது போன்று பசுமையும் மகிழ்சியும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால், ஒருவருக்கொருவர் ஒருபோதும் ஈகோவுடன் நடந்துக்கொள்ளக்கூடாது.
ஈகோ தான் அனைத்து உறவுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருக்கின்றது. எனவே திருமண உறவில் இதனை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
தம்பதிகளில் ஒருவர் ஈகோவுடன் இருந்தாலும், அந்த உறவை நீ்டிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலை உருவாகும் என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக திருமண உறவில் கணவன் மனைவிக்கு இடையில் குறிப்பிட்டளவு சுதந்திரம் மற்றும் மரியாதை இருக்க வேண்டியது அவசியம்.
எந்த உறவாக இருந்தாலும் முதலில் மரியாதையுடன் நடத்த வேண்டியது அவசியம். மரியாதையும் சுதந்திரமும் இல்லாத இடத்தில் இருப்பதும் அதற்காக நேரம் செலவழிப்பதும் வீண் எனவே திருமண வாழ்வில் இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார்.
சாணக்கியரின் கூற்றுக்கு இணங்க, உறவுகளின் அத்திவாரமே நம்பிக்கை தான் எனவே திருமண வாழ்வில் பிரிவு ஏற்படவே கூடாது என நினைப்பவர்கள் துணையை நம்பவும் துணைக்கு நம்பிக்கையானவராக இருக்கவும் வேண்டியது அவசியம்.
சில உறவுகளில் மனிதர்கள் எல்லா உறவுகளும் தங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பெரும்பாலும் நினைக்கின்றனர். ஆனால் தாங்கள் எந்தளவுக்கு உண்மையானவர்கள் என்பது குறித்து அக்கறை செலுத்துவது கிடையாது.
திருமண வாழ்வை பொருத்தவரையில் ஒருவருக்கொருவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம் அப்போது தான் அந்த உறவில் இருவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |