தாறுமாறாக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் டீ! ஈஸியாக தயாரிக்கலாம்
புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரையாகும். புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக நோயெதிரப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகின்றது.
அந்தவகையில் தற்போது புதினைவை டீ வடிவில் எடுத்து கொள்வது நல்லது. தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
புதினா இலை - 7
தேயிலை - ஒரு டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்
பால் - கால் டம்ளர்.
பாரதியை நான் மறந்துவிடுகிறேன்! பிக்பாஸ் பாணியில் ரேகா போட்ட திட்டம்
செய்முறை
ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.
பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.