செருப்பு போட்டுகிட்டே ஆசிர்வாதம்? இளையராஜாவுக்கு ஆதரவாக கவிஞர் சினேகனின் மனைவி
இளையராஜாவைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறார் சினேகன் மனைவி கன்னிகா.
சினேகன் - கன்னிகா
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சைகளால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் கமல்ஹாசனுடன் கட்சியில் இணைந்துகொண்டார்.
பிறகு கமல்ஹாசன் தலைமையில் தான் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகாவை இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.
சினேகனின் மனைவி கன்னிகா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
விமர்சனத்தில் இளையராஜா
இந்நிலையில், இளையராஜாவின் 80ஆவது பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரின் வீடு வரை சென்று மாலை அணிவித்து பட்டாடை போர்த்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை அவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட அதில் ஒருவர் ஆசீர்வாதம் பண்ற போது செருப்ப கழட்டனும்னு தோனல அவருக்கு. ஆசீர்வாதம் வாங்கும் போது கால தொட்டு தான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என கமெண்ட் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கன்னிகா, அவர தப்பா நினைக்காதீங்க.அவருக்கு சில மெடிக்கல் பிரச்சனைனால அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாங்க என கூலாக பதிலளித்திருக்கிறார்.