அர்ச்சகர் இல்லாமல் தாலி எடுத்து கொடுத்த கமல்… எனக்கான ஆண் தேவதை!! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புது மாப்பிள்ளை
பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கவிஞர் சினேகன்.
அதில், "எனக்கான எல்லா உறவுமாய் இருந்து என் இல்லற இணைவு விழாவை முன்னின்று நடத்திய என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதைக்கு என் ஆயுள் உள்ளவரை நன்றிகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். நன்றி அண்ணா" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சினேகன்.
எனக்கான எல்லா உறவுமாய் இருந்து என் இல்லற இணைவு விழாவை முன்னின்று நடத்திய என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதைக்கு என் ஆயுள் உள்ளவரை நன்றிகளை கூறிக்கொண்டே இருப்பேன்.
— Snekan S (@KavingarSnekan) July 31, 2021
நன்றி
அண்ணா... pic.twitter.com/lxlupacXKU
அர்ச்சகர் இல்லாமல் நடைப்பெற்ற இந்தத் திருமணத்தில் கமல் தாலி எடுத்துக் கொடுக்க, அதை கன்னிகாவின் கழுத்தில் கட்டினார் சினேகன்.