பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூமிகா? பதறிப் போன பிரபல தமிழ் நடிகை... அவர் என்ன சொன்னாரு தெரியுமா?
பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் என 90ஸ் கிட்ஸின் இதயம் கவர்ந்த நடிகை பூமிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறார் என தகவல்கள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகை பூமிகா அளித்துள்ள விளக்கம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தனக்கு பிக் பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனிலேயே கலந்து கொள்ள அழைப்பு வந்ததாகவும் நடிகை பூமிகா கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 15 விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இது பற்றி பூமிகாவே இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், அது உண்மையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னிடம் பேசப்படவில்லை. அப்படி கேட்டாலும் நான் ஒப்பு் கொள்ள மாட்டேன்.
சீசன் 1, 2,3 மற்றும் அதற்கு பிறகும் பலமுறை என்னிடம் கேட்டார்கள். ஆனால் அனைத்தையும் நான் மறுத்து விட்டேன். இந்த முறை என்னிடம் கேட்கவில்லை.
இப்போதும் அதை ஏற்க நான் தயாராக இல்லை. நான் பப்ளிக் பெர்சனாலிட்டி தான்.
ஆனால் ஒரு தனி நபர். 24 மணி நேரமும் கேமிரா முன் இருக்க முடியாது. என்னை எப்போதும் கேமிராக்கள் கண்காணிப்பதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.