பிபி கொண்டாட்டத்தில் விக்ரமனுக்கு சூட்டப்பட்ட மகுடம்! வன்மத்தை வெளிப்படுத்திய அசீம், தனலட்சுமி
பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாளராக வந்தார். பின்பு விக்ரமன் மற்றும் ஷிவின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
குறித்த சீசனில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் வெற்றி பெற்றார். இதனால் விக்ரமன் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.
பிக்பாஸில் கொடுத்து கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்ததுடன், அசீம் அதனை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் காணப்பட்டார்... ஆனால் கமல்ஹாசன் விக்ரமன் பக்கம் ஒதுங்கி நின்றிருந்தார்.
இதனால் கமலுக்கு அசீமின் வெற்றி பிடிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், சக போட்டியாளர்களுக்கும் இது விருப்பமில்லாமலே இருந்து வருகின்றது.
பிபி கொண்டாட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு பிபி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் தற்போது பிபி கொண்டாட்ட நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் விக்ரமனுக்கு துப்புறவு தொழிலாளர்கள் மகுடம் சூட்டி பெருமை படுத்தியுள்ளனர்.
விக்ரமன் இப்படி பாராட்டு பெறுவதை பார்த்த அசீம் மற்றும் தனலட்சுமி மட்டும் எந்த ஒரு ரியாக்சன் கொடுக்காமல் இருந்த நிலையில், பின்னே ரச்சிதா, ஷிவின் அசீமை வெறுப்பேற்றுவது போன்று கூச்சல் போட்டு கடுப்பேற்றியுள்ளனர்.
மற்றொரு ப்ரொமோ காட்சியில் ஷிவின் தனது அம்மாவை நினைத்து வாடிய நிலையில், அவரது ரசிகைகள் அவருக்கு ஒரு தாயாக மாறி மகுடம் சூட்டினர். இந்த காட்சியும் ப்ரொமோவாக வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.