பிக்பாஸ் சீசன் 6 சர்ச்சை! மகனுக்காக காவல்நிலையம் வரை சென்ற மகேஸ்வரி! நடந்தது என்ன?
பிக்பாஸில் கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி மகனை அவதூறாக பேசியவர்கள் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் மகேஸ்வரி
பிக்பாஸில் கலந்து கொண்ட மகேஸ்வரி தனது கருத்துக்களை எப்பொழுதும் வெளிப்படையாக கூறிவரும் நிலையில், சில வாரங்களிலே பிக்பாஸிலிருந்து வெளியே வந்தார்.
இவரது வெளியேற்றம் நியாயம் இல்லை மக்கள் கூறிவந்த நிலையில், அசீமின் வெற்றியைக் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்தார்.
பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு தவறான முன்னுதாரணமாக சமுதாயத்தில் ஆகிவிடக்கூடாது என்று அவர் தனது கருத்தை கூறியுள்ளார்.
ஏனெனில் அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் பல இடங்களில் அடுத்தவர்களின் சுயமரியாதை இழக்கும் வகையில் பேசி இருப்பது பாதிக்கப்பட்டவரின் மனநிலையை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தின் மனநிலையையும் பாதிக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ளவே இல்லை.
இதை அங்கீகரித்தால் சமுதாயத்திலும் இதையே பலரும் பண்ணலாம் என்று பலர் புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.
அசீம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மகேஸ்வரியை, ச்சீ வாயை மூடு நீ எல்லாம் வெளியே போனா உன்னை காரி துப்புவார் என்று பேசியிருந்தார். இந்த வார்த்தை மகேஸ்வரியை மட்டுமின்றி அவரது மகனையும் அதிகமாகவே பாதித்தது.
மகனுக்கு கொடுத்த அட்வைஸ்
ஆனால் விஜே மகேஸ்வரி அசீமின் வெற்றியை குறித்து பேசியது அசீம் ரசிகர்கள் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை மட்டுமின்றி, அவரது மகனையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு மகேஸ்வரி வார்னிங் கொடுத்தது மட்டுமின்றி தனது மகனுக்கு அட்வைஸும் கொடுத்திருந்தார். சமீபத்தில் தன்னுடைய மகனோடு புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட மகேஸ்வரி, "ஒரு போராளியாக இருப்பதற்கு நன்றி, என் மகனே! நச்சு ஆண்மை நிறைந்த இந்த உலகத்தை, நீ பெண்களுக்கான சிறந்த உலகமாக மாற்றப் போகிறாய் என்று நான் நம்புகிறேன். நீ மாற்றமாக இருப்பாய் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அம்மா உன்னை பாதுகாப்பேன்" என்று கூறி அதற்கு கீழே "குறிப்பு: புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கையும் கொடுத்து இருந்தார்.
Thank you for being a warrior!!! My boy .. Iam sure your gonna make this world filled with toxic masculinity a better world for women . You I’ll be the change and Iam proud of it ? mom will protect you .Note:complaint will be filed and legal action will be taken shortly ? pic.twitter.com/HOo1RsaAuK
— Vj_Maheswari (@maheswarichanak) February 6, 2023
கொடுக்கப்பட்ட புகார்
மகேஸ்வரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள ரசீதை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரியை தவறாக பேசி வந்த நபர்கள் மட்டுமின்றி, சில வலைதள ஐடிகளும் சிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மகேஸ்வரி தான் புகார் கொடுக்கப்பட்டிருந்த ரசீதை டுவிட்டரில் பதிவிட்டு சில நிமிடங்களில் அதனை நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.