இந்த ரமழான் பெருநாளை சிறப்பாக கொண்டாட வீட்டிலேயே செய்யலாம் பலூடா!
புனித ரமழான் மாதம் வந்து விட்டாலே அனைத்து இஸ்லாமியர்களும் புனித நோன்பை நோக்கத் தொடங்கி விடுவார்கள்.
இந்த ரமழான் காலத்தில் எல்லோரும் புது புது உணவுகளை செய்து சுவைப்பார்கள். அதில் மிகவும் சிறப்பே இந்த பலூடா தான். அதை வீட்டிலேயே வைத்து சுலாபமாக செய்யலாம். எப்படித் தெரியுமா?
தேவையான பொருட்கள்
- பால் – 1 கப்
- பிரெட் -3
- சர்க்கரை – 1/2 கப்
- எசன்ஸ் -1 தேக்கரண்டி
- வேகவைத்த சேமியா- 1 கப்
- ஜெல்லி – 1 கப்
- நறுக்கிய பழங்கள்
- செர்ரி பழம் – 3
- முந்திரி, காய்ந்த திராட்சை – சிறிதளவு
செய்முறை
முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலில் பிரெட் துண்டுகளை போடவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்கள் வெட்டி சேர்க்கவும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து அலங்கரிக்கவும். அவ்வளவு தான் ப்ரிஜில் வைத்து எடுத்தால், சுவையான பலூடா ஐஸ்கிரீம் ரெடி.