மனிதர்கள் போல் சிலந்திகள் இருந்தால் என்ன நடக்கும்? சுவாரஸ்யத்துடன் கூடிய கற்பனை
மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்களில் சிலந்திகளும் ஒன்று.
அண்டார்டிகாவைத் தவிர்த்து கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் மாறுப்பட்ட சிலந்திகள் காணப்படுகின்றன.
சிலந்திகள் சிறிய உயிரினமாக இருந்தாலும் அதிலுள்ள விஷம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
இவை சிறியதாக இல்லாமல் மனிதர்கள் போல் பெரிதாக இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பதனை எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா?
சிலந்திகள் சிறியதாக இருக்கும் போதே பல அச்சுறுத்தல்களை கொடுக்கிறது என்றால் பெரிதாக இருந்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ முடியாது போல் உள்ளது.
அந்த வகையில் சிலந்திகள் பெரிதாக இருந்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிலந்திகள் பெரிதாக இருந்தால் என்ன நடக்கும்
மனிதர்கள் போல் சிலந்திகள் இருந்தால் அதன் வலைகள் வீடுகளை போல் பெரிதாக இருந்திருக்கும். அவை மரங்கள், கட்டிடங்கள், சாலைகள் என எல்லா இடங்களிலும் இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. பெரிய விலங்காக இருப்பதால் வலைகள் வலுவானதாக அமைத்து கொள்ளும்.
தற்போது பூச்சிகளை பிடித்து உணவாக உட்க் கொள்வது போன்று பெரிதாக இருந்தால் பசியில் மனிதர்களை கூட சாப்பிடலாம். இதனால் மனிதர்களின் இடம்பெயர்வு குறைவாக இருக்கும். சிலந்திகள் தன்னை சாப்பிட்டு விடும் என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாதப்படி ஒழிந்திருப்பார்கள்.
விதைகள் அளவில் இருக்கும் சிலந்திகளின் விஷம் மனிதர்களுக்கு கெடுதலை ஏற்படுத்துவதை போன்று பெரிய சிலந்திகளின் விஷம் மனிதர்களை கொன்று குவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் நினைக்கும் பொழுது தான் கடவுளின் படைப்பின் மகிமை விளங்குகிறது. சிலந்திகளின் வலையில் சிறிய பூச்சிகள் மாட்டி அவஸ்தை அனுபவிப்பது போன்று மனிதர்களும் சிக்கிக் கொண்டு உணவாகியிருப்பார்கள்.
தன்னைவிட சிறிய விலங்குகள் எல்லாவற்றையும் வேட்டையாடி பசியாற்றும் விலங்காக சிலந்தி மாறி விடும். இதனிடையே மனிதர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வார்கள்.
அச்சுறுத்தும் சிலந்திகளை கொல்வதற்கு மனிதர்கள் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதுவிதமான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வார்கள். உதாரணமாக முழுமையாக அழிப்பதற்கு ஆயுதங்கள், ரோபோக்கள், இரசாயன குண்டுகள் போன்றவைகளை கூறலாம். இந்த போரில் மனிதர்களும் கொல்லப்படுவார்கள்.
இவற்றை கற்பனையில் நினைக்கும் போதே இவ்வளவு கொடுமையாக இருக்கே.. நிஜத்தில் நடந்தால் பூமியின் நிலை எப்படி இருக்கும்?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |