உளுந்து வடையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள்
தமிழர்களின் உணவில் வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு, காலை உணவில் சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே அலாதி சுவை தான்.
பண்டிகை காலம், சுபநிகழ்ச்சிகள் என்றாலும் உளுந்து வடை முக்கிய இடம்பெறும்.
உளுந்து மட்டுமின்றி அதில் போடப்படும் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி என ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பொருட்களால் இன்னும் சிறப்பாகிறது.
இவைகள் கொண்டு தயாரிக்கப்படும் வடை எளிதில் செரிமானம் ஆகும்.
காலை நேரத்தை விட மாலை வேளைகளில் மொறுமொறுவென உளுந்து வடையை ருசிக்கலாம்.
உடல் இளைத்தவர்கள் உளுந்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தேகம் வலுப்பெறும்.
உடலை குளிர்ச்சியாக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது உளுந்து.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் வயிற்று வலியை பிரச்சனையை சரிசெய்யவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும் உளுந்தை தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
மிக முக்கியமாக தரமான எண்ணெயில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலியால் அவதிப்படும் நபர்கள் உளுந்து வடையை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
எனினும் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, ஆஸ்துமா சளி தொந்தரவு, காய்ச்சல் இருப்பவர்கள் உளுந்து வடையை தவிர்க்கவும்.