ஊரே மணக்கும் ருசியான ஓட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி? இதோ
பொதுவாக தமிழ்நாட்டில் இட்லியை காலை மற்றும் இரவு உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம். இட்லிக்கு சூப்பரான காமினேஷன் எது என்றால் சாம்பார். இட்லியில் சாம்பாரை ஊற்றி சாப்பிடுவதே ஒரு தனி சுவைதான். இட்லிக்கு ஊரே மணக்கும் ஓட்டல் சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க -
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 2 கப்
வெந்தயம் – அரை ஸ்பூன்
தேங்காய் துருவியது – 4 ஸ்பூன்
காய்கறிகள் – முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், பரங்கிக்காய்
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – அரை ஸ்பூன்
பெருங்காயம் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 4 கொத்து
தக்காளி - 2
புளி – சிறிய உருண்டை
உப்பு – தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் – 20
காய்ந்த மிளகாய் – 8
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வர கொத்தமல்லி – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் குக்கரில் பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒரு கடாயில் கடலைப்பருப்பு, வர கொத்தமல்லி, தேங்காய், மிளகாய், வெந்தயம் சேர்த்து நன்றாக வாசம் போகும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர், சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு, புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர், மேலே சொன்ன காய்கறிகள் போட்டு நன்றாக வேகும் வரை கொதிக்க விடுங்கள். காய்கறிகள் வெந்த பிறகு பருப்பை சேர்க்க வேண்டும். பின்னர், அரைத்த மசாலாப்பொடியை சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு தீயை அணைத்துவிடுங்கள். சுவையான ஓட்டல் சாம்பார் ரெடியாகிவிடும்.
இப்படி சாம்பார் செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் 4 இட்லிக்கு மேல் சாப்பிடுவார்கள்.
சாப்பிடுபவர்களுக்கு இந்த சாம்பார் செய்து கொடுத்தால் 8 இட்லிகளை சாப்பிடுவார்கள். எனவே நாளை காலை டிபனுக்கு மறக்காமல் இந்த அரச்சுவிட்ட சாம்பாரை செய்துவிடுங்கள்.