இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே தெரிவிக்குமாம்
சிறுநீரகத்தில் தாக்க இருக்கும் நோய் தொற்றின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரக செயல் இழப்பை தடுக்கலாம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று பெரும்பாலான மக்களின் உணவுப்பழக்கங்கள் மாறிவரும் நிலையில், எளிதில் நோய் தொற்றும் ஏற்பட்டு விடுகின்றது. குறிப்பாக சிறுநீரகத்தினை பாதிக்கும் நோய்கள் அதிகமாகவே இருக்கின்றது.
ஆம் சிறுநீரகம் ரத்தத்தினை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு அளிக்கும் நிலையில், பெரும்பாலான நபர்கள் சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், சிறுநீரக கோளாறின் அறிகுறிகளை வைத்து அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் சரிசெய்ய முடியும். சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள் என்ன?
ஒருவருக்கு கை, கால்கள் மற்றும் சிறுநீரக பகுதி வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
சிறுநீரில் ரத்தம் மற்றும் சீல் வடிதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தாலும் அலட்சியம் செய்யக்கூடாது.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்படும்.
குடும்பத்தில் வேறு யாருக்காவது சிறுநீரக பிரச்சினை இருந்தாலோ அல்லது 60 வயதுக்கு மேல் உள்ளவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பரிசோதனை என்ன?
சிறுநீரக நோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு முறை KFT செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனையின்பேரில் இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டும்.