விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை
நடிகை மாளவிகா தற்போது அவரின் புகைப்படங்களை ரசிகர்களுக்காக தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கோலிவுட்டில் நடித்த காலங்களில் நடந்த அனுபவங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
அப்போது அவர், குருவி படத்தில் டன்டனக்கா டர்னா பாடலுக்கு விஜய் உடன் நடனமாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன்.
இந்த தகவலை டான்ஸ் மாஸ்டரிடம் தெரிவித்தேன். இதைப் புரிந்து கொண்டு, அந்த பாடலில் எனக்கு எளிமையான ஸ்டெப்களை கொடுத்தார்.
ஆனால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடுவது எனக்கு சிரமமானதாக இருந்தது. அது எனது கடைசி படம் என நினைத்துக் கொண்டேன்.
ஆனால் முழு மனதுடன் முயற்சித்து அந்த பாடலுக்கு ஆடி முடித்து விட்டேன்.
ஆனால் அதற்கு பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிஜமாகி விட்டது என்றார்.