எனக்கு தாயாக ஆசையாக இருக்கு: தொகுப்பாளினி பிரியங்கா எமோஷனல் பேட்டி
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே பிரியங்கா தனக்கு குழந்தை பெற்றெடுக்க ஆசையாக உள்ளதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
விஜே பிரியங்கா விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் மற்றவர்களை எப்போதும் ஃபன்னாக சிரிக்கவைத்துக் கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இவர் சிறந்த தொகுப்பாளினியாக 3 முறை விருது பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் அவரின் திருமணவாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசும் போது 'எனக்கு என் வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் வேண்டும். என்னையும் யாராவது பயங்கரமாக காதலிக்க வேண்டும்.
அப்புறம் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னோட முதல் கணவரால் எனக்கு சந்தோஷமே இல்லை.
என்னுடைய திருமண விஷயத்தில் தப்பான முடிவு எடுத்துவிட்டேன். அதை எல்லாவற்றையும் எனது அம்மா மன்னித்து என்னை ஏற்றுக்கொண்டார்.
எனவே இனிமேல் என் பெரிய முடிவுகள் எல்லாவற்றையும் என் அம்மாவிடம் தான் கொடுப்பேன். இதில் நான் திட்டமிட்டபடி ஒவ்வொரு விஷயமாக முடித்து கொண்ட வருகிறேன்.
முதல்ல பிக் பாஸ்க்கு போறது, கார் வாங்குறது, மாடி வீடு கட்டுவது, அப்படின்னு ஒவ்வொன்னா முடிச்சுட்டே வாரேன்'. என கூறியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |