குழந்தை பிறந்த சில மாதங்களில்... நடிகை இலியானாவின் பதிவு: என்ன சொல்லி இருக்கிறார்?
நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா, அவருடைய தாய்மை குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை இலியானா
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை இலியானா.
இவர் 2006 ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
பின் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியான களமிறங்கினார். அதற்குப் பிறகு அவர் வேறு எந்த தமிழ்த்திரைப்படத்தில் நடிக்கவில்லை.
பின் அவர் கரப்பமாக இருப்பதை திடீரென அறிவித்திருந்தார். இந்நிலையில் தாய்மை குறித்து தனது சமூக ஊடகத்தில் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
"உண்மையில் தாய்மை கடினம்தான்"
சமீபத்தில் இவர் ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் மைக்கேல் டோலன் தான் நடிகை இலியானாவின் கணவர்.
இந்நிலையில் தாய்மை குறித்து அவர் தெரிவிக்கையில், நான் செல்ஃபி எடுத்து நீண்ட நாளாகி விட்டது என்று உணர்கிறேன். முழுநேரமும் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இப்போது வீட்டிலேயே இருப்பதால் எனக்கான நேரம் கிடைப்பதில்லை.
குழந்தை என் முடியை இழுத்து விடக்கூடாது என்று அள்ளி முடிந்த கூந்தலை வைத்திருக்கிறேன்.
பல நாட்கள் தூங்காமலும் இருந்திருக்கிறேன். உண்மையில் தாய்மை கடினமான பயணம்.இதை நான் குறையாக சொல்லவில்லை. என் குழந்தை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.
ஆனால், குழந்தைப் பிறப்பிற்கு பின்பு அதனால் வரும் மன அழுத்தம் மிகப்பெரிய விடயம். நிச்சயம் இப்போதுள்ள வாழ்க்கைக் குறித்து நான் உங்களுடன் பேசுவேன்.
விரைவில் திரும்பி வருவேன். சில அம்மாக்களைப் போல உடனே என்னால் வர முடியவில்லை. ஆனால், பொறுமையாக நலமுடன் திரும்பி வருவேன்’ என நடிகை இலியான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |